என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாபாவங்களை நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்
    X

    மகாபாவங்களை நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்

    நமது பாவவினைகளை தீர்க்கும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
    சாவித்திரி வேதமாதாச காயத்ரி சரஸ்வதி
    சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ
    சதாஸர்வார்த்தஸாதினீ
    சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச

    - கருடபுராண ஸ்லோகம்

    பொதுப் பொருள்: சாவித்திரியான தேவியே, வேதமாதாவான காயத்ரியே, சரஸ்வதியே, சங்க்ரியே, பிராம்மணி அம்மனே, எப்போதும் அனைத்துலகும் நலம்பெற  அருள்பவளே, ஆயிரம் நாமம் கொண்டவளே, உன் நாமங்களை சொல்வதினாலேயே பாவங்களைப் போக்குபவளே, உனக்கு நமஸ்காரம்.

    - நமது பாவவினைகளை தீர்க்கும் இந்த ஸ்லோகத்தை ஜெபம் செய்யும்போது ஒரு சொம்பு தண்ணீரை இடக்கரத்தில் ஏந்தி இம்மந்திரத்தை 3 தடவை உச்சரித்து, அந்த நீரைத் தலையில் கொஞ்சம் வலது கையால் தலையில் தெளித்துக்கொண்டு, சிறிதளவை அருந்தியும் வந்தால் சிறந்த பலன்கள் கிட்டும். குளிக்கச் செல்லும் முன் தண்ணீரில் வலது நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை உச்சரிப்பார்கள். குறிப்பாக ஒவ்வொரு மாசிமாத மக நட்சத்திர தினத்தன்றும்.
    Next Story
    ×