search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்
    X
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள்

    இந்த வார விசேஷங்கள் 11.2.2020 முதல் 17.2.2020 வரை

    பிப்ரவரி 11-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    11-ந்தேதி (செவ்வாய்) :

    * குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம்.
    * பழனி முருகப்பெருமான் காலை தோளுக்கினியானிலும், இரவு தெப்பத் தேரிலும் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
    * வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமாரசாமி திருவீதி உலா.
    * தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் லட்ச தீபக் காட்சி.
    * களக்காடு சக்தி வாகீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * சங்கடஹர சதுர்த்தி.
    * திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    13-ந் தேதி (வியாழன்) :

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்ச தீப உற்சவம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான், தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    14-ந் தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவில் தெப்ப உற்சவம்.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவம் ஆரம்பம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (சனி) :

    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.
    * ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * இன்று விஷ்ணு ஆலயங்களில் வழிபாடு செய்வது நன்மை தரும்.
    * சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (ஞாயிறு) :

    * காளகஸ்தி, திருகோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பவனி.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (திங்கள்) :

    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கயிலாய வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
    * ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.
    * திருகோகர்ணம் சிவபெருமான் வீதி உலா.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×