search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    இந்த வார விசேஷங்கள் 31.12.2019 முதல் 6.1.2020 வரை

    டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து ஜனவரி 6-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    31-ந்தேதி (செவ்வாய்) :

    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காலிங்க நர்த்தனக் காட்சி.
    * ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கண்ணன் திருக்கோல காட்சி.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (புதன்) :

    * ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு.
    * திருநெல்வேலி, திருச்செந்தூர், சுசீந்திரம், சிதம்பரம், செப்பறை ஆகிய தலங்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்.
    * ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர், காலை சூரியப் பிரபையிலும், இரவு சந்திரப் பிரபையிலும் யோகாம்பிகை திருக்கோலக் காட்சி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபதநாதன் திருக்கோலம்.
    * கீழ்நோக்கு நாள்.

    2-ந்தேதி (வியாழன்) :

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய தலங்களில் திருவாய்மொழி திருநாள் தொடக்கம்.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், முதல்-அமைச்சர் திருக்கோலக் காட்சி.
    * சிதம்பரம் ஈசன், காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (வெள்ளி) :


    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலம்.
    மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருவரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் திரிபுர சம்கார லீலை, இரவு கயிலாச பர்வத வாகனத்தில் வீதி உலா.
    சிதம்பரம் ஈசன், காலை தங்க சூரிய பிரபையில் பவனி.
    சமநோக்கு நாள்.

    4-ந்தேதி (சனி) :


    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவர்த்தன தாரண லீலை, அமிர்த மோகினி திருக்கோலமாய் காட்சி தருதல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், முரளிக்கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல்.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை வெள்ளி சீவிகையில் பவனி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் விருசபாரூட தரிசனம்.
    * சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (ஞாயிறு) :


    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாலை முத்துக்குறி கண்டருளல், இரவு சேர்த்தியில் அழகிய மணவாளர் திருக்கோலக் காட்சி.
    * திருவரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலமாய், அர்ச்சுனன் மண்டபம் எழுந்தருளல்.
    * ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவக் காட்சி.
    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.
    * சமநோக்கு நாள்.

    6-ந்தேதி (திங்கள்) :


    * வைகுண்ட ஏகாதசி.
    * சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் திறப்பு விழா.
    * திருவரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.
    * காஞ்சிபுரம் பச்சை வண்ணன்- பவள வண்ணன் கருட பரமபத வாசல் திறப்பு விழா.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை ருத்ராட்ச விமானத்தில் உலா.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×