search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    இந்த வார விசேஷங்கள் 19.11.2019 முதல் 25.11.2019 வரை

    நவம்பர் 19-ம் தேதியில் இருந்து நவம்பர் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்) :

    மகாதேவ அஷ்டமி.
    சகல சிவபெருமான் கோவில்களிலும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்.
    கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்) :

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
    கீழ்நோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி) :

    முகூர்த்த நாள்.
    சுமார்த்த ஏகாதசி.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருமஞ்சன சேவை.
    திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
    மேல்நோக்கு நாள்.

    23-ந்தேதி (சனி) :


    வைஷ்ணவ ஏகாதசி.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
    மன்னார்குடி ராஜகோபால சுவாமி, கும்பகோணம் சக்கரபாணி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆகிய தலங்களில் திருமஞ்சன சேவை.
    திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    சமநோக்கு நாள்.

    24-ந்தேதி (ஞாயிறு) :

    முகூர்த்த நாள்.
    பிரதோஷம்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் அன்ன வாகனத்தில் வீதி உலா.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகிய தலங்களில் திருமஞ்சன சேவை.
    மதுரை இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், அவிநாசியப்பர் ஆலயங்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு.
    சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (திங்கள்) :

    மாத சிவராத்திரி.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் வீதி உலா.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவ விழா.
    சமநோக்கு நாள்.
    Next Story
    ×