search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி
    X
    தீபாவளி

    இந்த வார விசேஷங்கள் 22.10.2019 முதல் 28.10.2019 வரை

    அக்டோபர் 22-ம் தேதியில் இருந்து அக்டோபர் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    22-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம், இரவு கிளி வாகனத்தில் புறப்பாடு.
    * சோழிங்கபுரம் அமிர்தவல்லி தாயார்- பக்தோசி பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
    * திருநெல்வேலி அருகன்குளம் (மேலூர்) எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி பஞ்சரத்ன பூஜை.
    * மேல்நோக்கு நாள்.

    23-ந்தேதி (புதன்) :

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் மாலை சிவபூஜை செய்தல், இரவு சப்தாவரண பல்லக்கில் வீதி உலா.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை திருவீதி உலா வருதல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வியாழன்) :


    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    25-ந்தேதி (வெள்ளி) :

    * பிரதோஷம், இன்று மாலை அனைத்து சிவன் கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * திருநெல்வேலி காந்திமதியம்மன் அதிகாலை தபசுக்கு புறப்படுதல்.
    * தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடையம் ஆகிய தலங்களில் அம்பாள் திருக்கல்யாண வைபவம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (சனி) :

    * மாத சிவராத்திரி.
    * திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவிலில் காந்திமதியம்மன் திருக்கல்யாணம்.
    * திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயங்களில் உற்சவம் ஆரம்பம்.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (ஞாயிறு) :

    * தீபாவளி பண்டிகை.
    * அமாவாசை
    * கேதார கவுரி விரதம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் தீபாவளி தர்பார் காட்சி.
    *  திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை.
    * மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரீடம் சாற்றியருளல்.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், வீபிஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (திங்கள்) :

    * அமோ சோமவாரம்.
    * சகல முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி உற்சவம் ஆரம்பம்.
    * சிக்கல் சிங்கார வேலவர், குமாரவயலூர் முருகப்பெருமான் ஆகிய தலங்களில் சிறப்பு பிரார்த்தனை.
    * வள்ளியூர் முருகப்பெருமான் கோவிலில் தெய்வானை சமேத முருகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.
    Next Story
    ×