search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள்
    X
    இந்த வார விசேஷங்கள்

    இந்த வார விசேஷங்கள் 13.8.2019 முதல் 19.8.2019 வரை

    ஆகஸ்டு 13-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    13-ந்தேதி (செவ்வாய்) :

    * ஆடி தபசு.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடி தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணர் காட்சி அருளல், இரவு யானை வாகனத்தில் உமாமகேஸ்வரர் திருக்காட்சி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.
    * சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
    * வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் திருவீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (புதன்) :

    * இருக்கன்குடி மாரியம்மன் திருவீதி உலா.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    * உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி வருதல்.
    * மேல்நோக்கு நாள்.

    15-ந் தேதி (வியாழன்) :

    * ஆவணி அவிட்டம்.
    * பவுர்ணமி.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ரத ஊர்வலம்.
    * அவிநாசியப்பர் கோவிலில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் குருபூஜை.
    * இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * திருப்பரங்குன்றம்- திரு கூடல்மலை நவநீதப்பெருமாள் 100-வது ஆடித் திருவிழா தொடக்கம்.
    * மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (வெள்ளி) :

    * வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சப்தாவரணம்.
    * படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.
    * இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா.
    * அவிநாசி கருணாம்பிகை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் வீதி உலா.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
    * திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை.
    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (சனி) :

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
    * வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் வசந்த உற்சவம். முத்துப்பல்லக்கில் சுவாமி பவனி வருதல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (ஞாயிறு) :

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (திங்கள்) :

    * மகா சங்கடஹரசதுர்த்தி.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    * மேல்நோக்கு நாள்.
    Next Story
    ×