search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள்
    X
    இந்த வார விசேஷங்கள்

    இந்த வார விசேஷங்கள் 9.7.2019 முதல் 15.7.2019 வரை

    ஜூலை மாதம் 9-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    9-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி காலை இந்திர விமானத்திலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் பவனி.
    * திருக்கோளக்குடி, கண்டதேவி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாண உற்சவம்.
    * மதுரை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் பவனி வருதல்.
    * சமநோக்கு நாள்.

    10-ந் தேதி (புதன்) :

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மாள் வெள்ளி விருட்ச சேவை, இரவு இருவரும் இந்திர விமானத்தில் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ரத உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவிலில் சுவாமி திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    11-ந் தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேகம்.
    * வீரவநல்லூர் பூமிநாத சுவாமி கோவில் தெப்போற்சவம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
    * ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவிலில் ரத உற்சவம்.
    * சமநோக்கு நாள்.

    12-ந் தேதி (வெள்ளி) :

    * சர்வ ஏகாதசி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் தங்கப் பல்லக்கிலும், அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முத்துப் பல்லக்கிலும் பவனி, இரவு சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தாவரணம், இரவு வெட்டிவேர் சப்பரத்தில் புறப்பாடு.
    * மதுரை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    இந்த வார விசேஷங்கள்

    13-ந் தேதி (சனி) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர், கங்காளநாதராக காட்சி தருதல்.
    * திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.
    * திருப்பாப்புலியூர் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * மதுரை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
    * சமநோக்கு நாள்.

    14-ந் தேதி (ஞாயிறு) :

    * பிரதோஷம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் ரத ஊர்வலம்.
    * ராஜபாளையம் மயூரநாத சுவாமி ரதத்தில் வீதி உலா.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.
    * தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், மதுரை இம்மையில் நன்மை தருவார், அவிநாசியப்பர் ஆகிய தலங்களில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்.
    * உத்திரகோசமங்கை சிவபெருமான் பவனி.
    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (திங்கள்) :


    * முகூர்த்த நாள்.
    * காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா.
    * குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இன்று முதல் மூன்று நாட்கள் உற்சவம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி மூல தீர்த்தம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெண்ணெய் தாழி சேவை.
    * கானாடுகாத்தான் சிவபெருமான் தெப்ப உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×