என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 1.1.2019 முதல் 7.1.2019 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 1.1.2019 முதல் 7.1.2019 வரை

    ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஜனவரி 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    1-ந்தேதி (செவ்வாய்) :

    ஆங்கில வருடப் பிறப்பு.
    சுமார்த்த ஏகாதசி.
    திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம்.
    மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.

    2-ந்தேதி (புதன்) :

    வைஷ்ணவ ஏகாதசி.
    ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி வருதல்.
    கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (வியாழன்) :


    பிரதோஷம்.
    மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.
    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    இன்று மாலை அனைத்து சிவாலயங்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.

    4-ந்தேதி (வெள்ளி) :

    மாத சிவராத்திரி.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    திருத்தணி முருகப்பெருமான் பவனி வருதல்.
    மதுரை செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி.
    சமநோக்கு நாள்.



    5-ந்தேதி (சனி) :

    அனுமன் ஜெயந்தி.
    அமாவாசை.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    மதுரை செல்லத்தம்மன் விருட்ச சேவை.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
    வீரராகவபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாங்கி சேவை.
    கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (ஞாயிறு) :

    மதுரை செல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் புறப்பாடு, இரவு பட்டாபிஷேகம், புஷ்ப சப்பரத்தில் பவனி.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    கீழ்நோக்கு நாள்.

    7-ந்தேதி (திங்கள்) :

    மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கேவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    மேல்நோக்கு நாள்.

    Next Story
    ×