search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (6-9-2016 முதல் 12-9-2016 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (6-9-2016 முதல் 12-9-2016 வரை)

    6-9-2016 முதல் 12-9-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
    6-ந் தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, ருக்மணி- சத்யபாமா சமேத கிருஷ்ணர் திருக்கோல காட்சி.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், தருமிக்கு பொற்கிழி அருளல்.
    * விருதுநகர் சொக்கநாதர் கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
    * சமநோக்கு நாள்.

    7-ந் தேதி (புதன்) :

    * சஷ்டி விரதம்.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி வரும் காட்சி.
    * விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    8-ந் தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் வீதி உலா.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    9-ந் தேதி (வெள்ளி) :

    * மதுரை சோமசுந்தர கடவுள் வளையல் விற்ற காட்சி, இரவு சுவாமி பட்டாபிஷேகம். சுவாமி- அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * விருதுநகர் சொக்கநாதர் விருட்ச வாகனத்தில் சேவை.
    * சமநோக்கு நாள்.

    10-ந் தேதி (சனி) :

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் வீதி உலா.
    * திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.
    * மதுரை சிவபெருமான் நரிகளை, பரிகளாக்கிய லீலை.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமானும், திருவாதவூர் மாணிக்கவாசகரும் மதுரை எழுந்தருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    11-ந் தேதி (ஞாயிறு) :

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * மதுரை சொக்கநாதர் புட்டு திருவிழா, சுவாமி-அம்பாள் விருச பாரூட தரிசனம்.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (திங்கள்) :

    * திருநெல்வேலி குறுக்குத்துறை முருகப்பெருமான் கோவிலில் சண்முகம் அதிகாலை உருகு சட்ட சேவை. மாலை தங்க சப்பரத்தில் பவனி.
    * மதுரை சோமசுந்தரர் விறகு விற்ற லீலை.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.
    Next Story
    ×