search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சந்திர தோஷத்தை நீக்கும் திருவோண நட்சத்திர விரதமும்... அனுஷ்டிக்கும் முறையும்...
    X

    சந்திர தோஷத்தை நீக்கும் திருவோண நட்சத்திர விரதமும்... அனுஷ்டிக்கும் முறையும்...

    • பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம்.
    • சந்திர தோஷம் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர்...

    மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். திருவோண விரதத்தை தீவிர வைணவர்கள் ஒவ்வொரு மாதமும் பின்பற்றி வருகின்றனர். திருவோண விரதம் என்றால் என்ன எப்படி வந்தது என இங்கு காண்போம்.

    மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம்.

    காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும். மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும்.

    இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும். இந்த திருவோண விரதம் ஒருமுறை இருந்தால் கூட போதும் என பெரியோர் கூறுகின்றனர். விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

    மாலை வேளையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் இருந்து பெருமாலின் அருளைப்பெறுங்கள்.

    திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர்...

    Next Story
    ×