search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சனி பிரதோஷம் இன்று...விரதம் இருந்து வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள்...
    X

    சனி பிரதோஷம் இன்று...விரதம் இருந்து வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள்...

    • சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.
    • நினைத்த காரியம் நிறைவேறும்.

    சனிப்பிரதோஷம் ஆன இன்று நாம் சிவனை பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், சிவன் அருகில் உள்ள நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை மற்றும் சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு நன்மை கிடைக்கும். மேலும் உலக நன்மையை கருத்தில் கொண்டு தீமையான விஷத்தை சிவன் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு நன்மையை தரும் அருளை வழங்குவார்.

    பிரதோஷ தினமான இன்று அதிகாலையில் நீராடி குளித்து முடித்த பின்னர் திருநீர் இட்டு சிவநாமம் ஆன நமச்சிவாய என்ற வாசகத்தை ஓதி உங்களது வேண்டுதலை துவங்கலாம். இன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவினை தவிர்த்து விரதமிருந்து பிரதோஷத்தை முடித்த பின்னர் உணவை உட்கொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிடலாம் இப்படி பதினொரு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.

    மேலும் ஒரு சனி பிரதோஷமான இன்று ஒருநாள் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வந்தால் ஐந்து வருடங்கள் தினமும் நீங்கள் சிவன் கோயிலுக்கு சென்று வந்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த பிரதோஷம் வேண்டுதல் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாதெனில் : திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் , ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வறுமை நீங்கும், நோய்களால் அவதிப்பட்டு துன்புற்று இருக்கும் நபர்களுக்கு நோய்கள் நீங்கும், எடுத்த காரியங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே தடங்கலுடன் இருக்கும் அனைவருக்கும் சகல காரியங்களிலும் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும்.

    மேலும் சனிபிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவர்களுக்கு சிவன் அருளும் கிடைக்கும். பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை அனைவருடனும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இதே தினத்தில் நந்தியையும் சேர்த்து வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும் செல்வாக்கும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் தானங்கள் எண்ணிலடங்கா பலனை கொடுக்கும் என்பதால் நீங்கள் உங்களால் முடிந்த தானங்களை இன்று செய்யலாம்.

    ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…

    Next Story
    ×