search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்...
    X

    வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்...

    • வழக்குகளில் சிக்கியவர்கள் வராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
    • வராஹியை வழிபடுகிறவர்களுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்படும்.

    சப்த கன்னியர்களில் ஒருவரான வராகி தேவியை பஞ்சமியில் வழிபடுவது மிகச் சிறப்பு. சக்திவாய்ந்த தேவதையாக போற்றப்படுகிறாள் வராஹி தேவி. மகா சக்தியாகத் திகழும் பராசக்தி, தன்னில் இருந்து ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்றும் அவர்களைக் கொண்டு அசுரக் கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தாள் என்றும் விவரிக்கிறது புராணம். இந்த சக்திகள் ஏழு என்றும் இவர்களை சப்தமார்கள் என்றும் விவரிக்கிறார்கள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வராஹி தேவி.

    வாராஹியை வழிபடும் பக்தர்களிடம் தோல்வி கூட தோற்றே விடும். குறிப்பாக இந்தத் தேவியை பஞ்சமியில் வழிபடுவது மேலும் பல சிறப்புக்களை வழிபடுபவர்களுக்குத் தரும். அதாவது அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்து வரும் 5-வது நாளே பஞ்சமி எனப்படும். பஞ்சமி திதியில் வராகி தேவியை வழிபட்டு வர வெற்றி வீட்டின் வாசலை அழைக்காமலேயே வந்தடையும் என்பர். வழக்குகள் சாதகம் ஆகி எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். உடன், வெற்றி உங்கள் வாகை சூடும்.

    கல்வி, தொழில் அல்லது உத்யோகம் மேம்படும். கண்திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும். புத்தி நல்ல விதத்தில் வேலை செய்யும். இதனால் ஞானம் சித்திக்கும். பயம் தெளிந்து மனதில் துணிச்சல் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அன்னை வாராஹி.

    அன்னைக்கு பிடித்த நிறம் நீலம், கருப்பு, பவள நிறம், நீல சங்குப் பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்றது. பவுர்ணமி நாளில் அன்னையின் வலிமை கூடும். பஞ்சமி, அஷ்டமி, தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம். இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வாராஹியை நினைத்து வழிபடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமைத்தயிர். தேன் கலந்த மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை அன்னைக்கு பிடித்தமானது.

    கருப்பு உளுந்த வடை

    வராஹி தேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம் நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து படைக்கலாம்.

    வெள்ளை மொச்சை வராஹி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராகிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும். வழக்குகள் நீங்கும்

    எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள். வராகியை வழிபடுகிறவர்களுக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்படும். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, நினைத்தது நிறைவேறும்.

    வராஹி அன்னையை வழிபடுவர்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும்.

    நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துகள், ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாள் அன்னை வராஹி. நோய் தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் நோய்கள் பரவாமல் இருக்க இரவு நேரத்தில் வராகி தேவியை வழிபடலாம்.

    திதி லித்தியா தேவிகள் 15 பேர் உள்ளனர். 5-வது தேவதையாக லத்சிமா வாகினி உள்ளார். வியாதியை போக்க கூடியவர் கணவன், மனைவி ஒற்றுமை, சொத்து தகராறு, பூமியில் உள்ள பிரச்சினைகள் அளவுக்கு அதிகமான கடன் சுமைகள் ஆகியவற்றை தீர்த்து தருவார். பூமியில் இருந்து விளையும் பயிர்களுக்கு அதிபதி யாக உள்ளார். போர்படை தளபதி யான வராஹி தேவி கருத்த மேனியை உடையவர் இரவுக்கு அதிபதி.

    மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணிவரை வழிபடலாம். சிம்ம வாகனம், எருமை மாட்டு வாக னங்களில் வலம் வருவாள். எமபயத்தை தவிர்க்க கூடிய பலம் உடையவள். எலும்பு சம்பந்தமான நோய், சுண்ணாம்பு சத்து குறைபாடுகளால் வரும் நோய்களை குணப்படுத்துவாள்.

    உலக்கை ஏர்க்கலப்பைகளை ஆயுதங்களாக வைத்திருப்பார். பொய், பித்தலாட்டம் பிடிக்காது. வாழை இலையில் பச்சரிசி நிரப்பி, தேங்காய் உடைத்து, எருமை நெய் அல்லது பசு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வெள்ளை பூசணிக்காயை துண்டாக வெட்டி குங்குமம் பூசி நல்எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

    மரவள்ளி கிழங்கை வேகவைத்து நெய் தீபம் ஏற்றலாம். இவ்வாறு செய்பவர்களுக்கு பட்டம், பதவி, அரசியல் செல்வாக்கு கிடைக்கும்.

    Next Story
    ×