search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    கார்த்திகை விரதம் ... கவலை தீர்ப்பான் கந்தபெருமான்
    X

    கார்த்திகை விரதம் ... கவலை தீர்ப்பான் கந்தபெருமான்

    • நினைத்த காரியத்தை நடத்தித் தந்தருள்வார் கந்தபெருமான்.
    • வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

    இன்று கார்த்திகை விரத நாள். இன்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய கார்த்திகை விரத நாள். எனவே, இந்தநாளில், முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

    முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்வதும் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயம் சென்று வழிபடுவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

    செவ்வரளி மாலை சார்த்தி முருகனை வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகியுங்கள். நினைத்த காரியத்தை நடத்தித் தந்தருள்வார் கந்தபெருமான்.

    முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

    வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

    இந்த ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள்,காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

    Next Story
    ×