என் மலர்
தோஷ பரிகாரங்கள்

திருமண தடையை ஏற்படுத்தும் ஏழாமிடமும்... பரிகாரமும்...
- தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.
- களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம்.
முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும் வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.
பரிகாரம்: இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோஷமாக இருந்தாலும் அந்தத் தோஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோஷம்தான். அந்த சந்தோஷம் மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி வலு குறைந்து 11-ம் அதிபதி பலம் பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்த வேண்டும்.
நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.
ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரன் இல்லை. எப்படியாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்து விடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக் கூடாது.






