search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சகல தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த பரிகாலத்தலம்
    X

    சகல தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த பரிகாலத்தலம்

    • தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று.
    • இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.

    தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் ஈரோடு மாவட்டம் பவானியில், நான்கு மலைகளுக்கு இடையில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் இத்தலம் உள்ளது. காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் அமைந்துள்ளதால் சிவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார்.

    தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம். இந்த ஊரில் எரிக்கப்படும் சடலங்களின் மண்டை ஓடு வெடித்து சிதறுவதில்லையாம். இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதால் இவ்வாறு நடப்பதாக கூறப்படுகிறது.

    மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்ப பிரச்சனைகள் தீரும், தொழில் விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும். இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். இக்கோவிலில் நல்ல வெண் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    Next Story
    ×