search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    அரச மரத்தை எத்தனை முறை சுற்றினால் பிரச்சனைகள் தீரும்...
    X

    அரச மரத்தை எத்தனை முறை சுற்றினால் பிரச்சனைகள் தீரும்...

    • அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.
    • குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

    பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். மூம்மூர்த்திகளின் வடிவமான அரச மரத்தை பூஜை செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.

    சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக நன்மைகள் அடையலாம்.

    மற்ற நாட்களைவிட , சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைப் பெற அரச மரத்தை சுற்றிவரலாம்.

    கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.00 மணிக்குள், உடல் மற்றும் உள்ளத் தூய்மையுடனும், பக்தியுடனும் அரச மரத்தை 108, 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும். எல்லா நாட்களிலும் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம், நமஸ்காரம் செய்யலாம். நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களில் அரச மரத்தை வழிபாடு செய்வதை தவிர்த்தல் நல்லது.

    Next Story
    ×