search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்னபூரணி
    X
    அன்னபூரணி

    அன்ன தோஷம் வரக்காரணமும், பரிகாரமும்

    அன்ன தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. எதனால் இந்த தோஷம் ஒருவருக்கு வருகிறது இந்த தோஷத்திற்கு என்ன பரிகாரம் என்று அறிந்துகொள்ளலாம்.
    அன்ன தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. இந்த தோஷம் ஒருவருக்கு வந்து விட்டால் வயிறு எப்போதுமே வாடிய நிலையில் தான் காணப்படும். முகம் பொலிவிழந்து விடும். மனதில் எப்போதும் சோகம் குடிக்கொண்டிருக்கும்.

    எதனால் இந்த தோஷம் ஒருவருக்கு வருகிறது என்பதை பின்வருமாறு பார்ப்போம்,

    1. ஏழை, எளியவர்கள் பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்கள்.

    2. வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் பசியாக இருக்கும் சமயத்தில் தாங்கள் மட்டும் சாப்பிடுபவர்கள்.

    3. பிறரை சாப்பிடகூட விடாமல் பசிக்கப் பசிக்க வேலை வாங்குபவர்கள்.

    4. உணவு சாப்பிட அமர்ந்தவர்களை சாப்பிட விடாமல் சண்டை போட்டு விரட்டி அடிப்பவர்கள்.

    5. போதுமான் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள் அல்லது உணவை குப்பையில் அடிக்கடி கொட்டுபவர்கள்.

    6. சிறு குழந்தைகளை பார்க்க வைத்துக் கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்கள்.

    என மேற்கண்ட அனைவருக்கும் அன்ன தோஷம் ஏற்படும்.

     அன்ன தோஷத்திற்கான பரிகாரம்

    வெள்ளிக் கிழமைகளில் பால் நிவேதனம் செய்து வெள்ளை மலர் கொண்டு அன்னை அன்னபூரணியை வழிபட்டு வாருங்கள். இயன்ற மட்டும் ஏழைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு அன்ன தானம் செய்யுங்கள். இதனால், இத்தோஷத்தில் இருந்து சீக்கிரத்தில் விடுபட இயலும்.
    Next Story
    ×