search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசு சிலுவையில் தொங்கிய போது சொன்ன 7 வாசகங்கள்

    ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.
    200 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை புனிதவெள்ளி என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். புனித வெள்ளியன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கிய போது சொன்ன 7 வாசகங்கள் குறித்து பிரசங்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    அதில் முதலாவது வார்த்தை (லூக்கா-23:34) பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.

    ஒரு சிறு குழந்தை தவறு செய்யும் போது அறியாமல் செய்துவிட்டது என்று சொல்லி, சுலபமாக மன்னிப்பதுபோல இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்கிறார். அவரது கொலைக்கு காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும் அவரை சிலுவையில் அறைந்த போர் சேவகர்களும் எப்படி அறியாமல் செய்திருக்க கூடும். அதுவும் அந்த நாட்டின் மிக கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி நன்மைகளை மாத்திரம் செய்து வந்த இவரை கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்ல முடியும்?

    உண்மை என்னவென்றால் அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த மனிதனுடைய மனக்கண்களை குருடாக்கி இவர்களது இருதயத்தை கடினப்படுத்தி இப்படி ஒரு கொடூரச்செயலை செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரை கொடூரமாக சிலுவையில் அறையமாட்டார்கள். ஆகவேதான் இயேசு இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து விட்டார்கள் என்று சொல்லி மன்னிக்கிறார்.

    அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனுவர்க்கத்தின் பாவத்திற்கு
    இயேசு
    வை சிலுவையில் பலியாக்க கடவுள் சித்தம் கொண்டிருந்தார்.ஆகவே தான் இந்த சம்பவம் நடந்தது. நாமும் இயேசுவை போல மன்னிக்கும் குணம் உடையவர்களாய் காணப்படுவோம். ஆமென்.

    போதகர் எஸ்.விஜயகுமார்

    பரிபூரண ஜீவன் ஏ.ஜி.சர்ச், பல்லடம்.

    Next Story
    ×