search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பகைவரிடத்தில் பாசம்

    இயேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம்.
    ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவர் நன்றாக படிப்பதிலும் பைபிள் வாசிப்பதிலும் கவனமாக இருந்து வந்தாள். ஆனால் சிறுமியின் வீட்டின் அருகே இருப்பவர்கள் சிறுமியின் குடும்பத்தை பற்றி எப்போதும் ஒரு குற்றத்தை கண்டுபிடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர். இப்படி காலங்கள் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்தவருக்கு பிறந்த நாள் வந்தது.

    அந்த நாள் அந்த சிறுமியோ கையில் ரோஜா மலர்களை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்று ஐயா உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று கூறினார். உடனே அவர் அந்த சிறுமியை இமை கொட்டாமல் பார்த்து நின்றார். பின்னர் அந்த சிறுமியை பார்த்து நீ, எனக்காக பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறாய், நான் உன் கண் முன்னே உன் பெற்றோரை வாயில் வந்தபடி பேசி திட்டி உள்ளேன். உங்களிடம் எப்போதும் சண்டையிட்டு கொண்டு உன் வீட்டில் உள்ள அனைவரும் எங்களிடம் பேசவே மாட்டார்கள். ஆனால் நீயோ எனக்கு வாழ்த்து சொல்ல வந்துள்ளாயே? என்று திகைத்து போனார்.

    உடனே அந்த சிறுமி ஐயா, இயேசு உங்களை நேசிக்கிறார். ஆகவே நானும் உங்களை நேசிக்கிறேன் என்று சொன்னாள். பின்னர், இன்று உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்விப்பட்டவுடன், நான் தினமும் வாசிக்கும் பைபிளிள் மத்தேயு 5-ம் அதிகாரம் 44-ம் வசனத்தில், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது எனக்கு ஞாபகம் வந்தது. உடனே தான் உங்களை சந்திக்க வந்தேன். இனி நாம் பகைவர்களாக இருக்க வேண்டாம். நாம் அனைவரும் தேவ பிள்ளைகளாக வாழ்வோம் என்று கூறி சென்று விட்டாள் அந்த சிறுமி. அவரும் மனம் திரும்பி அவர்களை நேசிக்க ஆரம்பித்து நன்றாக வாழ்ந்து வந்தனர்.

    இதே போல தான் நாமும் இந்த உலகத்தில் எத்தனையோ காரியங்கள் இயேசுவுக்கு பிடிக்காத காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இயேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் இந்த தவக்காலத்தில் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம். தேவன்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    ஜெபசிங், அன்பின் ஊழியம், வீரபாண்டி.
    Next Story
    ×