search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசு என்னை நரகத்திற்கு போகாமல் தடுக்க முடியுமா?

    ஆனால் இயேசு என்னை நரகத்திற்கு போகாமல் தடுக்க முடியுமா? முடியும்! ஆனால் என்னுடைய பாவத்திற்கான ஈடுபொருளை அவரிடம் மன்றாடி கேட்கும் பொழுது அதை பெற்று கொள்வேன்.
    மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:18) அநேக கிறிஸ்தவர்களுக்கு நரகம் என்றால் என்ன என்று தெரியும்.

    இயேசு அநேக இடங்களில் நரகத்தை பற்றி வேதாகமத்தில் எச்சரித்தும் இருக்கிறார். நரகம் மனிதர்களுக்கு உருவாக்கப்பட்டது அல்ல. அது சாத்தானுக்காகவும் அவனுடைய சகாக்களுக்காகவும் கடவுளை எதிர்த்ததினால் உருவாக்கப்பட்டது. எப்பொழுது மனிதன் கடவுளுக்கு கீழ்படியாமல் போனானோ அன்றிலிருந்துதான் மனிதனுக்கும் அதில் பங்கு ஏற்பட்டுவிட்டது. சாலமோன் ராஜா நீதிமொழிகளின் புத்தகத்தில் பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை. (நீதி மொழிகள் 27:20) என்று தனது மகளை எச்சரிக்கிறார். இயேசு நரகத்தை அழியாத அக்கினி என்று குறிப்பிடுகிறார். அது கே

    டு (மத்தேயு 7:13) புறம்பான இருள் (25:30) அக்கினி சூளை (13:50) இயேசு பாதாளத்தின் வாசல்களை தன் சீஷர்களுக்கு கூறுகையில் நரகத்தில் தள்ளப்படுவதை பார்க்கிலும் இருகைகளும், கண்களும் இல்லாமல் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் என்கிறார். இயேசு தன் சீஷர்களுக்கு பணக்காரன் மரித்த பின் நரகம் செல்வதையும் மற்றும் ஏழை லாசரு ஆபிரகாமின் மடியில் சொர்க்கத்தில் சேருவதை கதை மூலமாக விவரிக்கிறார். (லூக்கா 16:19-31) நரகத்தில் இருப்பவர்கள் சொர்க்கத்தில் இருப்பவர்களுடைய சந்தோஷத்தை காண முடியும்.

    நரகத்தில் இருக்கும் வாதையின் ஒரு பகுதியே ஒருவன் மறுமையை குறித்து எடுத்த தவறான முடிவை அவனுக்கு சுட்டிக்காட்டுவதே ஆகும். சாலமோன் ராஜா பிள்ளையை தண்டிக்க சொல்கிறார். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவை தப்புவிப்பாயே (நீதி மொழிகள் 23:14) இயேசு நம் எல்லோருக்காகவும் பாவமானார், சாபமானார், நமது பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் .

    ஆனால் இயேசு என்னை நரகத்திற்கு போகாமல் தடுக்க முடியுமா? முடியும்! ஆனால் என்னுடைய பாவத்திற்கான ஈடுபொருளை அவரிடம் மன்றாடி கேட்கும் பொழுது அதை பெற்று கொள்வேன். நரகத்திற்கு செல்ல தகுதியுடையவன் பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலை பாதகரும் விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8) முடிவு நம் கையில்.
    Next Story
    ×