search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    கிறிஸ்துவின் சிந்தை

    தேவன் தமது குமாரனை அனுப்பி உலகத்திற்கு, உலகத்தில் வாழும் நமக்கு நற்சிந்தையை கிறிஸ்து இயேசுவை கொண்டு மாதிரியாகவும், சிந்தையை மாற்றாதவராகவும், மாறாதவராகவும் விளங்குகிறார்.
    இ ன்று உலகம் தவறான மனித சிந்தையினால், தவறான சூழ்நிலைகளுக்கு ஆட்பட்டு உள்ளது. ஆனால், இவ்வுலகத்தில் தேவன் தமது குமாரனை அனுப்பி உலகத்திற்கு, உலகத்தில் வாழும் நமக்கு நற்சிந்தையை கிறிஸ்து இயேசுவை கொண்டு மாதிரியாகவும், சிந்தையை மாற்றாதவராகவும், மாறாதவராகவும் விளங்குகிறார். கிறிஸ்துவின் சிந்தை எப்படி பட்டதாய் இருந்தது எதை போதித்தது என்று தியானிப்போமானால் பவுல் அப்போஸ்தலின் பிலிப்பியர் நிருபத்தில் இவ்வாறு சொல்லுகிறார். கிறிஸ்து இயேசுவின் சிந்தையே உங்களிலும் இருப்பதாக என்று பிலிப்பியர் 2:5-ல் கூறியபடி கிறிஸ்துவின் சிந்தையில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

    சிலுவையில் ஆணிகளால் கடாவப்பட்டு, தலையில் முள்கிரீட உபத்திரவத்திலும் பிதாவே இவர்களுக்கு மன்னியும் (லூக்கா 23:34) என்று சொன்ன கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தை. 40 நாட்கள் உபவாசத்திற்கு பின் பிசாசினால் சோதிக்கப்பட்ட போது பிசாசை வசனங்களால் மேற்கொண்டு விரட்டிய வேதவசனம் நிறைந்த சிந்தை (மத்தேயு 4:1-10) தேவாலயத்தில் பிரசங்கித்தபோது வசனங்களை அதிகாரமுடையவராய் போதித்த சிந்தை (மத்தேயு 7:28) உலகத்தின் வருத்தங்களை சுமந்து இருக்கிற மக்களைப்பார்த்து வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்திலே வாருங்கள் என்ற ஆறுதலின் சிந்தை (மத்தேயு 11: 28, 29) பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் மத் 12:7, என்றவர் கானானிய பெண்ணிற்கு மனமிறங்கினார். (மத்தேயு 15:22, 28) இது தேவனின் இரக்க சிந்தை. தம்மை நோக்கி வந்த யாவரையும், சுகமாக்கினார், மனதையும் குணமாக்கிய அவரது குணமாக்கும் சிந்தை (மாற்கு 7:37) ஜீவனையும், ஆத்துமாவையும் உயிர்ப்பிக்கும் சிந்தை, லாசருவின் ஜீவனையும், சகேயுவின் ஆத்துமாவையும் உயிர்ப்பித்த சிந்தை (யோவான் 11:43, 44)

    நம்மீது வைத்த அளவற்ற அன்பினால் அவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை-சங்கீதம் 121:4 உன்னைப்போல் பிறனையும் நேசி என்ற அன்பின் சிந்தையே கிறிஸ்துவின் சிந்தையாகும். அந்த சிந்தையை நாமும் பெற்று வாழ்ந்து கிறிஸ்துவின் சிந்தையை நிலை நாட்டிட ஆண்டவராகிய தேவன் தாமே நமக்கு அருள் புரிவாராக.
    Next Story
    ×