search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தோல்வியை கடந்திடுவோம்

    தோல்வியின்றி வரலாறு இல்லை. தோல்வியுற்றவர்களே இன்றைய வரலாற்றின் நடுநாயகமானவர்கள் என்பதனை சரியாக இனம் கண்டிடுவோம்.
    ஒரு தனிமனிதனின் விடாமுயற்சி இந்த வரலாற்றை மாற்றி அமைத்திடும். வாழ்வு என்பது அனுபவித்து வாழ்வதற்கும் ஏராளமான ஏற்ற இறக்கங்களை கடந்து பயணம் செய்வதற்கும் நமது கரத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 26 ஆண்டுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ரோபன் தீவில் சிறையில் வாழ்ந்தவர் நெல்சன் மண்டலா. இவரது இத்தகைய மனோபக்குவமே மாபெரும் வெற்றியை அளித்தது. அவர் விடுதலையாகி தென் ஆப்ரிக்கா சுதந்திரம் அடைந்த போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு மாபெரும் பரிசுகளை உலகிற்கு வழங்கினார். ஒன்று தென்ஆப்ரிக்காவில் 10 சதவீதமே இருந்த வெள்ளையர்களுக்கு அடிப்படை உரிமைகளை சம உரிமையாக வழங்கினார். யார் தம்மை அடிமைப்படுத்தினார்களோ, அவர்களை மனிதனாய் பார்த்து அன்பு செய்தார். இரண்டாவதாக சிறையிலிருந்த போது சுதந்திரத்தை தேடி ஒரு நீண்ட பயணம் என்றொரு புத்தகத்தை எழுதினார். உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது நமது மாபெரும் கடமை என்பதனை உணர்வோம்.

    அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் ஒரே லட்சியத்தோடு அந்த அநீதி அழிக்கப்படும் வரை போராட வேண்டும். பல்வேறு முரண்பாடுகளோடு சமநிலையற்றி மனப்பான்மையோடு உலகம் இயங்குகிறது என்ற பேருண்மையை உணர்வோம். அதனை அகற்றுவதும், உண்மையை நிலை பெற செய்வதும் தனிமனிதர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இறையருளின் காலமாகிய இந்ததவக்காலத்தில் வாழ்வில் ஏற்படுகின்ற தோல்விகளை உண்மையோடு ஏற்றிடுவோம். அவற்றை கடந்து செல்வோம்.

    தோல்வியின்றி வரலாறு இல்லை. தோல்வியுற்றவர்களே இன்றைய வரலாற்றின் நடுநாயகமானவர்கள் என்பதனை சரியாக இனம் கண்டிடுவோம். தனிமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கண்டு எவ்விதமான நெருடல்களுக்கும் உட்பாடதவாறு நமது மனதினை பக்குவப்படுத்திடுவோம். ஒவ்வொருநாளின் இறுதியிலும் தூங்க செல்வதற்கு முன்பாக இன்றைய நாளில் நான் முன்னெடுத்தவைகளில் என்னை முரண்பாடு கொள்ள செய்தவை எவையென்பதனை கண்டுபிடித்திடுவோம். அதனை சீர் செய்து கொண்டு பணியினை மீண்டும் தொடங்கிடுவோம்.

    அருட்பாணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×