search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசு உங்கள் வேதனையை காண்கிறார்

    இயேசு உங்கள் வேதனையை காண்கிறார். அன்று அந்த விதவைக்கு அந்த மகன் அவசியமாயிருந்தான் இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார். உங்கள் கண்ணீரை காண்கிற இயேசு அழாதே என்கிறார்.
    கர்த்தர் அவளைப்பார்த்து அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி (லூக்கா: 7:13)

    இயேசு நாயீன் ஊருக்குள் போனார். திரளான ஜனங்களும், சீஷர்களும் அவருடன் கூடப்போனார்கள். அவர் ஊரின் வாசலுக்கு சமீபித்தபோது மரித்து போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டு வந்தார்கள். அவன் தன தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்: ஊராரின் வெகு ஜனங்கள் அவளுடனே கூட வந்தார்கள் (லூக்கா:7:12)

    இந்த வசனங்களில் இரண்டு விதமான திரள் கூட்டத்தை பற்றி பார்க்க முடிகின்றது. ஒரு கூட்ட மக்கள் இயேசுவோடு கூட வருகின்றார்கள். மற்றொரு கூட்ட மக்கள் தன் மகனை பறிகொடுத்த விதவை தாயோடு வருகின்றார்கள்.

    இயேசு செய்யும் அற்புதங்களை பார்த்திட அவரோடு கூட திரளான ஜனங்கள் நடந்து வந்திருப்பார்கள். மரித்த வாலிபனை அடக்கம் செய்திட விதவை தாயோடு கூட திளரான ஜனங்கள் நடந்து வந்திருப்பார்கள்.

    இப்படிப்பட்ட இரண்டு விதமான திரள் கூட்ட ஜனங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இயேசு கிறிஸ்து முயற்சி செய்யாமல் நம்பிக்கை இழந்த நிலையில் கண்ணீரோடு காணப்படும் தாயை தேற்றுவதையே மேன்மையாக கருதியுள்ளார். ஏனென்றால் அந்த தாயின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. அவளுடைய கணவனும் மரித்து போனான். இப்போது அவளுடைய வாழ்வுக்கு ஒரே நம்பிக்கையும் ஆதாரமுமாயிருந்த மகனும் இறந்து போனான். இனி அவளுக்கு யாரும் இல்லை. அவளுடைய இனி பாதுகாப்பும் இல்லை. துணையும் இல்லை. அவள் வாழ்வில் தனித்து போனதினால் கண்ணீரோடு கதறி அழுதாள்.

    இயேசு தனது வாழ்க்கையில் கண்ணீர் சிந்திய அநேகரை சந்தித்த போதிலும், இப்படிப்பட்ட ஒரு கண்ணீர் சிந்துகின்ற தாயை சந்தித்த பொழுது தாமாகவே முன் சென்று அவளை பார்த்து மனதுருகி அழாதே என்றார். எத்தனை பெரிய ஆச்சரியம் இயேசுவிடம் யாரும் இநத் மரித்து போன மகனை எழுப்பும் படி கேட்கவுமில்லை, மன்றாடவுமில்லை. அவராகவே சென்று பாடையை தொட்டார். தொட்டதும் அதை சுமந்தவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், வாலிபனே எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். (லூக்கா:7:12-15)

    பிரியமானவர்களே உங்கள் சூழ்நிலையை யாரும் காணவில்லை. என்று கலங்காதிருங்கள். எந்த சூழ்நிலையாயினும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்திருக்கும் இயேசுவையே நோக்கி பாருங்கள். நமது ஆண்டவர் மனதுருக்கமுள்ள தேவன். இயேசு உங்கள் வேதனையை காண்கிறார். அன்று அந்த விதவைக்கு அந்த மகன் அவசியமாயிருந்தான் இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் அறிவார். உங்கள் கண்ணீரை காண்கிற இயேசு அழாதே என்கிறார். 
    Next Story
    ×