search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செபமாலை செபிக்கும் முறை
    X
    செபமாலை செபிக்கும் முறை

    கத்தோலிக்க செபமாலை செபிக்கும் முறை

    பெண்களை பொறுத்த வரையில் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்முறைகள் போதுமானது. எனவே அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது களைப்பையும் சோர்வையும் ஏற்படுத்தி விடும்.
    * முதலில் சிலுவை அடையாளத்துடன் செபமாலை தொடங்கும்.
    * சிலுவையைப் பிடித்தவாறே விசுவாச அறிக்கை சொல்லப்படும்.

    * பெரிய மணியில் கிறித்து கற்பித்த செபம் (பரலோகத்தில்...) செபிக்கப்படும்.
    * மூன்று சிறிய மணிகளில் மங்கள வார்த்தை செபம் (அருள் நிறைந்த...) சொல்லப்படும்.
    * பெரிய மணியில் திரித்துவப் புகழ் (தந்தைக்கும், மகனுக்கும்...) கூறப்படும்.

    * அதன்பின் அன்றைய கிழமைக்கு ஏற்ற மறைபொருள்களின் மறையுண்மைகள் தியானித்து செபிக்கப்படும்.

    * முதல் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,

    * ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.

    * இரண்டாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,

    * ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.

    * மூன்றாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,

    * ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.

    * நான்காம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,

    * ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.

    * ஐந்தாம் மறையுண்மையை சொல்லி தியானித்தவாறே,

    * ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.

    * செபமாலையைத் தொடர்ந்து பல செபங்கள், மன்றாட்டுமாலை, விவிலிய வாசகம் ஆகியவை இடம்பெறும்.
    * இறுதியில் சிலுவை அடையாளத்துடன் செபம் முடியும்.

    குறிப்பு: செபமாலையில் பயன்படுத்தப்படும் "ஓ என் இயேசுவே!..." செபம் பாத்திமா அன்னை கற்றுக்கொடுத்தது ஆகும்.

    ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும். 
    Next Story
    ×