search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    உழைப்பை முதன்மைப்படுத்துவோம்

    நாம் உழைப்பை நேசித்தால், உழைப்பு நம்மை நேசிக்கும். இறைவனின் அருளும் நமக்கு முழுதாய் கிடைக்கும்.
    பிறரிடமிருந்து நமக்கு ஏதாவது கிடைக்காதா? பிறர் நமக்கு எதையாவது தரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிற மக்களே, இன்று உலகில் அதிகம் பேர் உள்ளனர். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது சிறுவயதில் இருந்தே நாம் பிறரை எதிர்பார்த்து இருப்பது தான். அம்மா என் சட்டை எங்கே? என் பேனா எங்கே? என் ஒவ்வொரு விஷயத்துக்கும் அம்மாவை சார்ந்தே வாழ பழகியர்கள் கிக்கல்களுக்குள்ளே வாழ்வை நகர்த்துவார்கள். எப்போதும் கணினியிலும், அலைபேசியிலும் மூழ்கி இருக்கும் மாணவர்களுக்கு தின்பண்டங்களையும், நொறுக்கு தீனிகளையும் எடுத்து கொடுக்கும் பெற்றோர்கள், எதிர்கால தலைமுறையினரையே அழிக்கின்றனர் என்றுதான் அர்த்தம்.

    சொந்த காலில் நிற்க வேண்டும். உழைப்புக்கு தயாராக இருப்பவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்து இறங்கிய போது அவரை அழைக்க சென்ற மனிதர் அவரது கையில் இருந்த பெட்டியை கேட்டபோது பெட்டியை பிறரிடம் கொடுத்து விட்டு நடக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை என்றாராம். அப்போது அவரது வயது எழுபது. பிறர் உதவியை உழைப்பை எதிர்பாராததே அவரது வெற்றியின் ரகசியமாகும்.

    உடல் உழைப்பு கேவலமானது அல்ல. அது தான் மனித வாழ்வில் வெற்றியின் ரகசியமாகும். நேசிப்பவர்களுக்கு வெற்றி காத்திருக்கிறது. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் உழைக்காதவன் உண்ணலாகாது என்ற பவுலடியாரின் கூற்றினை வாழ்வாக்கப்புறப்படுவோம். உலகில் பெரும் சாதனையாளாராக கருதப்படுகிற மக்கள் எல்லாருமே உழைப்பினை முழுதாய் நேசித்தவர்கள். உழைப்பினால் உயர்வடைய முடியும் என நம்பியவர்கள். முதன் முதலாய் நமது மனதினில் புரையோடிப்போய் காணப்படுகிற குறுக்கு வழியில் வெற்றி பெற முடியும் என்ற சித்தாந்தத்தை அடித்து விரட்டுவோம். நமக்கென ஒரு அட்டவணையை தயார் செய்வோம். அதில் நமது உடல் நலன் உடல் பராமரிப்பு பொழுது போக்கு ஆகியவற்றிற்கு நேரம் ஒதுக்கி விட்டு உழைப்பினை முதன்மைப்டுத்துவோம்.

    ஒவ்வொரு நாளும் எட்டுமணி நேரம் உழைப்பு அவசியமானது என்பதனை நமது உள்ளத்தில் பதிய செய்வோம். நாம் விருப்பத்தேமடு உழைக்கிறபோது உடல் வலுப்பெறுவதோடு உள்ளமும் மேன்மை அடைகிறது. அப்போது நாம் பெறுகிற தன்னம்பிக்கை இன்னும் சிறப்போடு வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. நாம் உழைப்பை நேசித்தால், உழைப்பு நம்மை நேசிக்கும். இறைவனின் அருளும் நமக்கு முழுதாய் கிடைக்கும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×