search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து

    பூவுலகில் அவதரித்த மண்ணின் மைந்தன் இயேசு கிறிஸ்து பிதாவின் அற்புத தேவ திட்டத்தின்படி மனுக்குலத்திற்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை வேதாகமத்தில் காண்கிறோம்.
    பிரியமானவர்களே ! அன்பின் நல்வாழ்த்துகள்

    பூவுலகில் அவதரித்த மண்ணின் மைந்தன் இயேசு கிறிஸ்து பிதாவின் அற்புத தேவ திட்டத்தின்படி மனுக்குலத்திற்காக தன்னைத்தானே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்பதை வேதாகமத்தில் காண்கிறோம். யோவான் 15: 10-ல் பிதாவின் கற்பனைகளை அப்படியே கடைபிடித்தார் என்று பார்க்கிறோம். சுயமாக எதையும் செய்யாமல் ஒவ்வொரு அசைவும் பிதாவின் சித்தத்தின்படியே செய்தார். தன் விருப்பம் , ஏக்கம் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்தார். என் மூலமாக என் பிதா சந்தோஷப்படவேண்டும் என்று பார்த்து பார்த்து பிதாவை முன்னிறுத்தி செய்து முடித்தார். ஒரு நாள் வந்தது மரணத்துக்கேதுவான துக்கம் அது சிலுவை மரணம். மகாகொடிதான, வலி நிறைந்த பாதை பிதாவிற்காக அந்த பாதையிலே நடக்க விட்டுக்கொடுத்தார்.

    சிலுவையில் தன் உலக மக்களுக்காக தன் ஜீவனை விட்டார். (மத் 27:50) எதிரிகளும், அவரை விரோதித்தவர்களும் இயேசுவின் கதை முடிந்தது எனறு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனந்தமடைந்தார்கள் . ஆனால் பிதாவோ தனக்காகவே தியாகமாய் வாழ்ந்த இயேசுவை கைவிடவில்லை 3-ம் நாளிலேயே இயேசுவை உயிரோடு எழுப்பி, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, மேலான நாமத்தை இயேசுவுக்கு தந்தருளி, அவருடைய பாதத்திற்கு கீழ்படுத்தினார். அல்லேலுயா (பிலி 2:9-11) எதிராளிகளின் எல்லா தந்திரங்களையும் பிதா முறியடித்தார். ஆம் பிரியமானவர்களே, நம் வாழ்க்கையிலும் கூடு நம்மேல் தேவன் வைத்திருந்த தேவ திட்டத்தை அறிந்து நாம் நம்மை இயேசுவுக்கு அர்ப்பணிப்போம். மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்தினாலும், கீழ்தரமாக நினைத்தாலும் பரவாயில்லை. இயேசுவின் சித்தத்தை செய்ய நாம் தீவிரமாய் இருக்க வேண்டும், சில காலங்கள் பொறுமையாய் காத்திருங்கள், உங்களுக்கென்று ஒரு நேரம்- ஏற்றநேரம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

    பிதா தன் மகனை மறக்காமல் உயர்த்தினது போல, சர்வத்துக்கும் அதிகாரியாகிய இயேசு நம்மையும் ஒரு நாள் ஏளனமாய் பார்த்த எல்லா ஜனங்களுக்கும் மேலாக உயர்த்தி ஆசீர்வதிப்பார். நம் தேவன் நம்மை கன்மலையில் உயர்த்தும் தெய்வம். ஜீவனுள்ள ஒரே மெய்யான தெய்வம், நம்மை கைவிடமாட்டார். ஏனெனில் அவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, அவரை நம்பி நம் வாழ்க்கையை ஒப்புகொடுத்து இந்த தேசத்தில் ஆசிர்வாதமாயிருப்போம் கர்த்தருக்கே மகிழமை தேவ கிருபை உங்களுடனிருப்பதாக!ஆமென்.

    போதகர். சாம் அகஸ்டின்.

    சிட்டி ஏ.ஜி.சபை, திருப்பூர். 
    Next Story
    ×