search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவ வசனம்
    X
    தேவ வசனம்

    தவக்கால சிந்தனை: தேவ வசனம்

    தேவனுடைய வசனங்களை படிக்கும் போது அதன் சுவையை அறிந்துள்ளோமா? என்பது நாம் ஒவ்வொருவருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது.
    பிரியமானவர்களே, நம்மில் பலருக்கு பலவிதமான சுவை பிடிக்கும். ஆனாலும் நம்முடைய நாக்கு பல்வேறு சுவையை தேடும். அப்போது அதை சாப்பிடலாமா? இதை சாப்பிடலாமா? என்று விதவிதமான சாப்பாடு, பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பலகாரங்கள் என்று சுவைத்து பார்ப்பதும் உண்டு. அப்படி நாம் சுவைக்கும் போது நாக்கில் எது சுவையாக உள்ளதோ அதை தான் நாம் சாப்பிடுவது உண்டு. ஆனால் தேவனுடைய வசனங்களை படிக்கும் போது அதன் சுவையை அறிந்துள்ளோமா? என்பது நாம் ஒவ்வொருவருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், தாவீது என்னும் அரசன் ‘உமது வார்த்தைகள் என் நாவிற்கு இன்பமும், என் வாய்க்கு தேனிலும் மதுரமானது‘ என்று சொல்லுகிறார்.

    இப்படியாக வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வசனங்கள் ஏராளமாய் உள்ளன. ஆனால் அந்த வசனங்கள் எப்படி உள்ளது என்றால், யோவான் 6-ம் அதிகாரம் 63-ம் வசனத்தில், ‘நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது‘ என்று சொல்லப்பட்டுள்ளது.

    ஆம், பிதாவின் வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாயிருக்கிறது. பிதாவின் வார்த்தை மண் குகையில் ஏழு தரம் உருக்கி புடமிட்ட சுத்தமான வார்த்தை. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் மேலான வல்லமையான வார்த்தையாக உள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே, தேவனுடைய வார்த்தைகள் பரிசுத்தத்திலும், அதிகாரத்திலும், வல்லமையிலும் உயர்ந்த வார்த்தைகளாகவே உள்ளது. ‘என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்‘ என்றார். உலக வேஷம் தரித்து தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனால் நமது ஜெபத்திற்கு பதிலும் இல்லை, உங்களை திரும்பியும் பார்க்கமாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே நாமும் இந்த நாட்களில் உலகத்தில் உள்ள பல்வேறு சுவைகளை தேடி அலைந்து கொண்டிருக்கலாம். ஆனால் தேனிலும் மதுரமான தேவனின் வசனங்களை சுவைத்து இன்பமான வாழ்க்கை வாழ்வோம்.

    சகோ. ஜோசப், அய்யம்பாளையம்
    Next Story
    ×