search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தவக்கால சிந்தனை: நிரந்தர மகிழ்ச்சி

    தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் நிரந்தர மகிழ்ச்சியை தருவாராக ஆமென்.
    ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சி. இப்படி வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பல்வேறு வகையில் காணப்படும். விடுமுறை நாட்களில் உறவினர்களின் வீட்டிற்கு செல்வது ஒரு மகிழ்ச்சி, ஒரு சிலருக்கு நமக்கு பிடித்தமான பொருளை பிடித்தமானவர்கள் வாங்கி கொடுக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி என்று மகிழ்ச்சியில் பல வகைகள் உள்ளது. ஆனால் நிரந்தரமாக மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றால் நம்முடைய ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருளும் எண்ணற்ற ஆசீர்வாதங்களை நாம் பெற்றிருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமானால், தேவனுடைய அன்பிலும், அவருடைய கற்பனைகளை கைக்கொள்வதிலும் முக்கியத்துவம் கொடுக்கும் போது அவருடைய மகிழ்ச்சி நமக்குள்ளேயே வருகிறது.

    யோவான் 15-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில், ‘என்னுடைய மகிழ்ச்சி உங்களில் நிலைத்திருக்கும் படிக்கும், உங்கள் மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்கு சொன்னேன்’ என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

    இன்று உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் கூட மகிழ்ச்சியை பெறுவதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கலாம். இந்த உலகம் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானதல்ல, ஆனால் தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது.

    எனவே தேவ பிள்ளைகளே இந்த உலகத்தில் உள்ள மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருக்காமல், தேவன் நமக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தவக்காலத்தில் சிந்தித்து செயல்படுவோம். தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் நிரந்தர மகிழ்ச்சியை தருவாராக ஆமென்.

    ரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம். 
    Next Story
    ×