search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.
    X
    புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

    ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மையாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 20-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. 22-ந்தேதி காலை 8 மணிக்கு கார்மல் பள்ளி அருட்பணியாளர் சேவியர் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு சப்பர பவனி, 23-ந்தேதி காலை 6 மணிக்கு மதுரை ஆயர் சகாய ஆனந்த் தலைமையில் தேர்த் திருப்பலி, 8.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு அன்னையின் அலங்கார தங்கத்தேர் பவனி, 11 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×