search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார்
    X
    புனித அந்தோணியார்

    புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலி, சிறப்பு மறையுரை நடக்கிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெறுகிறது.

    வருகிற 10-ந் தேதி காலையில் பண்டாரகுளம் பங்குதந்தை போஸ்கோகுணசீலன் தலைமையில் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலியும், மறையுரையுடன் திருவிழா சப்பர பவனியும் நடக்கிறது.

    11-ந்தேதி ஆலய திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு வாடியூர் பங்குதந்தை ஸ்டீபன் தலைமையில் திருப்பலி, வீரவநல்லூர் பங்குதந்தை ஞானதினகரன் தலைமையில் மறையுரை, காலை 6 மணிக்கு தாளார்குளம் பங்குதந்தை சந்தியாகு தலைமையில் திருப்பலி, தென்காசி உதவி பங்குத்தந்தை லூர்துமரியசுதன் தலைமையில் மறையுரை, 7.30 மணிக்கு வெங்கடாசலபுரம் பங்குதந்தை அல்போன்ஸ் தலைமையில் திருப்பலி, ஜவஹர்நகர் பங்குதந்தை அருள் அம்புரோஸ் தலைமையில் மறையுரையும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜெபமாலை நிகழ்ச்சியும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு பாளையம்செட்டிகுளம் பங்குதந்தை அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலி, சாந்திநகர் ஒடுக்கப்பட்டோர் பணிக்குழு செயலாளர் சேவியர்ராஜ் தலைமையில் மறையுரை நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வல்லம் பங்குதந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பலி, பாளையங்கோட்டை ஆயரின் செயலாளர் சுந்தர் தலைமையில் மறையுரை, காலை 6 மணிக்கு கோவில்பட்டி பங்குதந்தை அலாய்சியஸ் துரைராஜ் தலைமையில் திருப்பலி கொடியிறக்கம் நடக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மரிய பிரான்சிஸ் தலைமையில் ஆன்மிக தந்தை சகாயதாசன், உதவி பங்குதந்தைகள் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ் செல்வதயாளன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×