search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அலங்கார உபகார மாதா
    X
    அலங்கார உபகார மாதா

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா 6-ந்தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா 6-ந்தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, திருக்கொடி பவனி, செபமாலை, மாலை 6.30 மணிக்கு கொடிப்பட்டம் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 15-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் தங்கத்தேர் திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 6 மணிக்கு குரு குல முதல்வர் கிலாரியுஸ் தலைமையில் பெருவிழா நிறைவுத்திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு காசா கிளாரட் சபை அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் தலைமை தாங்குகிறார். அருட் பணியாளர் இன்னாசிமுத்து மறையுரையாற்றுகிறார். 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலியில் பள்ளி முதல்வர் ஸ்டாலின் மறையுரையாற்றுகிறார். பகல் 12 மணிக்கு சின்ன முட்டம் பங்கு அருட்பணியாளர் கிளாசின் தலைமையில் தமிழில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிர், இரவு 8 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜோசப்ரொமால்டு, இணை பங்குதந்தையர்கள் சகாயஆன்டணி, சகாயவில்சன், அன்பின் தேவசகாயம், பங்குப் பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியாவில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி, பங்கு இறைமக்கள் மற்றும் பலர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×