search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைமாதா தேவாலயத்தில் உள்ள ஏசுநாதர் சிலுவையை தொட்டு பக்தர்கள் வழிபட்ட காட்சி.
    X
    மலைமாதா தேவாலயத்தில் உள்ள ஏசுநாதர் சிலுவையை தொட்டு பக்தர்கள் வழிபட்ட காட்சி.

    பாந்திராவில் மலைமாதா ஆலய திருவிழா தொடங்கியது

    மும்பை பாந்திராவில் உள்ள மலைமாதா ஆலய திருவிழா தொடங்கியது. 15-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.
    மும்பை பாந்திராவில் பழமையான மலைமாதா ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

    இதையொட்டி நேற்று காலை 11.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    தொடர்ந்து திருவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதில், இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்கு நோயுற்றோர் மற்றும் வயதானவர்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க் கிழமை) கொங்கனிலும், 11-ந்தேதி மராத்தியிலும், 12-ந் தேதி தமிழிலும், 13-ந்தேதி மலையாளத்திலும், 14-ந்தேதி குஜராத்தியிலும் திருப்பலி காலை 11.30 மணிக்கு நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான 15-ந் தேதி காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
    Next Story
    ×