என் மலர்

  ஆன்மிகம்

  எண்ணூரில் புனித சூசையப்பர் ஆலய தேர் திருவிழா
  X

  எண்ணூரில் புனித சூசையப்பர் ஆலய தேர் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரசித்தி பெற்ற எண்ணூர் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மாதா பாடல்கள் பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்.
  எண்ணூரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.

  முன்னதாக தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சவேரியர், அந்தோணியார், ஆரோக்கியமாதா, சூசையப்பர் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவச்சிலைகள் (சொரூபங்கள்) தனித்தனி தேர்களில் வைத்து பவனியாக எடுத்து வரப்பட்டது.

  பவனியானது கோவில் வளாகத்தில் தொடங்கி கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், அண்ணா நகர் வரை உள்ள பகுதிகளில் வலம் வந்தன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மாதா பாடல்கள் பாடியபடி தேரை இழுத்துச் சென்றனர்.
  Next Story
  ×