என் மலர்

  ஆன்மிகம்

  பரலோக அன்னை ஆலயத்திருவிழா கொடியேற்றம் நடந்ததையும் அதில் திரளானவர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.
  X
  பரலோக அன்னை ஆலயத்திருவிழா கொடியேற்றம் நடந்ததையும் அதில் திரளானவர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.

  பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
  சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயத்தின் 215-வது ஆண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருக்கொடி பவனியாக கொண்டு வரப்பட்டது. வடக்கன்குளம் பாதிரியார் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கி கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பாதிரியார் ஜெரால்டுரவி, காவல்கிணறு மிக்கேல் மகிழன், ஜேம்ஸ், கலைச்செல்வன், மகிழன், கிங்ஸ்டன், சூசைமணி, கிளைட்டன் உள்பட பாதிரியார்கள், இறை மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

  விழா வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மதியம் 12 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு ஜெபமாலையும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

  7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு பாதிரியார் செல்வராயர் தலைமையில் திருமுழுக்கு திருப்பலியும், 8-ம் திருநாளான 13-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு திசையன்விளை பாதிரியார் பன்னீர்செல்வம் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு முதன்மை செயலர் நார்பர்ட் தாமஸ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது.

  14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு காவல்கிணறு பாதிரியார் மகிழன் தலைமையில் திருப்பலி, 9 மணிக்கு ஜான் பிரிட்டோ தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

  15-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் மின்னொளியில் அன்னையின் தேர் பவனி நடக்கிறது. காலை 5 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 6.45 மணிக்கு மலையாள திருப்பலி, 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு நன்றி வழிபாடு தேரில் வைத்து நடைபெறும். 
  Next Story
  ×