search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திரு இருதய ஆண்டவர் பேராலயத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா நாளை நடக்கிறது
    X

    திரு இருதய ஆண்டவர் பேராலயத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா நாளை நடக்கிறது

    தஞ்சை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா, நாளை தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடக்கிறது.
    தஞ்சை பூக்காரத்தெருவில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயமானது மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாகும். 1867-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கடந்த 1969-வது ஆண்டில் ஆயர் ஆரோக்கியசாமி சுந்தரம் தலைமையில் நூற்றாண்டு விழாவும், 1994-வது ஆண்டில் ஆயர் பாக்கியம் ஆரோக்கியசாமி தலைமையில் 125-ம் ஆண்டு நிறைவு விழாவும் நடைபெற்றன. இந்தநிலையில் தற்போது ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 150-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 28-ந் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் நவநாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று வந்தன.

    இன்று (சனிக்கிழமை) மாலை சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி மற்றும் தஞ்சை ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா நிகழ்ச்சிகளும் பேராலய 150-வது ஆண்டு கால வரலாற்றை நினைவு கூறும் கலை விழாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் இரவு திரு இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திரு இருதய பேராலயத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா திருப்பலி தஞ்சை ஆயர் எம்.தேவராஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஏ.ஜுடு பால்ராஜ் கலந்து கொள்கிறார். 150-ம் ஆண்டின் நிறைவு விழா நினைவாக பேராலயம் உருவம் பதித்த சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை எஸ்.செபஸ்டின் பெரியண்ணன் தலைமையில் பங்கு பேரவை, பொறுப்பாளர் மற்றும் பக்த சபையினர் மேற்கொண்டு வருகின்றனர். 
    Next Story
    ×