என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீய குணங்களை களைவதே தவக்காலம்
    X

    தீய குணங்களை களைவதே தவக்காலம்

    தவக்காலத்தில், எந்த நல்ல குணங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை விட, எத்தகைய தீய குணங்களை களைந்திட வேண்டும் என்பதே முக்கியம்.
    தவக்காலத்தில், எந்த நல்ல குணங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை விட, எத்தகைய தீய குணங்களை களைந்திட வேண்டும் என்பதே முக்கியம். அந்த வகையில் நம்மிடம் இருக்கும் தீய குணங்களில் முதன்மையானது பொறாமை. ஏனென்றால் பொறாமை தான் ஒரு மனிதனின் அழிவுக்கு வழிசெய்கிறது (உதாரணம்: காயின் - ஆபேல்). காயின், ஆபேலின் ரத்தத்தை சிந்தியதற்கு அடிப்படை காரணம் பொறாமை தான்.

    பொறாமையிலிருந்து புறப்படுகின்ற சினம் பாவத்தில் வேரூன்றி பழிவாங்குதலில் முடிகிறது. பொறாமை தன்னையும் அழிக்கும். தன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும். அடுத்தவர் கொஞ்சம் நன்றாக இருந்தால், நாலு காசு சேமித்தால், கொஞ்சம் சொத்து சேர்த்தால், அடுத்தவர் பொறாமை படுவர். எனவே தான் திருச்சபை, பொறாமையுடன் கூடிய எரிச்சலை பாவங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

    விவிலியத்திலும் பொறாமையின் விஷவேர் பரவிகிடப்பதைப் பார்க்க முடியும். சாத்தானின் பொறாமையால் சாவு இவ்வுலகில் நுழைந்தது. காயினின் பொறாமை, கொலையில் முடிந்தது. யாக்கோப்பின் மகன் யோசேப்பின் மீதுள்ள அவன் சகோதரர்களின் பொறாமை, அவனை பாழடைந்த கிணற்றில் தள்ளியது. கோலியாத்தை கொன்றதால் தாவீதை கண்டு சவுல் பொறாமை கொண்டார். அரசப்பதவியை இழந்தார். இவைகள் விவிலியத்தில் உள்ள ஒரு சில உதாரணங்களே! இப்படி சமுதாயத்தில் பொறாமையால் அலைகின்ற மக்கள் ஆயிரம் ஆயிரம்.

    இத்தகைய பொறாமையை களைந்திட என்ன செய்ய வேண்டும்? முதலாவதாக, நம்மிடம் பொறாமை உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நம்மிடம் உள்ள திறமைகளை இனம் கண்டுகொள்ள வேண்டும். மூன்றாவதாக, நம்மை யாரோடும் ஒப்பிடக்கூடாது.

    - ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்,
    தூய இருதய இளங்குரு மடம்,
    கும்பகோணம்.
    Next Story
    ×