என் மலர்
ஆன்மிகம்

இயேசு கடவுளின் மகன்
இயேசுவைக் காணவும், அவருடைய போதனைகளைக் கேட்கவும், அவரால் சுகம் பெறவும் எப்போதும் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும்.

ஒருமுறை இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், அவர்களுக்குப் போதிப்பதுமாய் இருந்தார். அந்த கூட்டத்தினரிடையே எருசலேம் தேவாலய உளவாளிகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் இயேசுவின் மேல் பழிசுமத்த தருணம் பார்த்துக் காத்திருந்தவர்கள்.
வீட்டு வாசல், சுற்றுப்புறம் எங்கும் மக்கள் திரள். ஏராளமான நோயாளிகள் அந்தக் கூட்டத்தில் வந்திருந்தார்கள். எப்படியாவது இயேசுவின் நோய் தீர்க்கும் கரம் தன் மேல் பட்டால் தம்முடைய வாழ்நாள் கவலை மறைந்து விடுமே என்று அவர்கள் காத்திருந்தார்கள்.
அந்த ஊரில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனும் இருந்தார். அவரால் நடக்கவும் முடியாது, அசையவும் முடியாது. ஏன் பேசக் கூட முடியாது. படுக்கையே உலகமாக வாழ்ந்து கொண்டிருந்தார் அவர். அவரும் இயேசுவைப் பற்றியும் அவருடைய குணமாக்கும் வரத்தைக் குறித்தும் அறிந்திருந்தார்.
அவருடைய மனைவியும் நான்கு மகன்களுமாக அவரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு கலிலேயா முழுவதும் அலைந்தார்கள். யாருடைய மருத்துவக் கரமும் அவரைக் குணப்படுத்தவில்லை. இயேசு கப்பர்நாகூமில் இருப்பதை அறிந்த அவர்கள் அவரை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு போக முடிவெடுத்தார்கள்.
நான்கு மகன்களும் அவரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு முன்னே செல்ல, கண்ணீருடன் மனைவி அவர்களைப் பின் தொடர்ந்தாள். தன்னை இயேசுவிடம் கூட்டிச் சென்றால் சுகம் கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவர்கள் இயேசு போதித்துக் கொண்டிருந்த வீட்டை அடைந்தார்கள்.
வீட்டை அடைந்த அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி! வீடு மக்கள் கூட்டத்துக்குள் மூழ்கிக் கிடந்தது. தனிமனிதனாக வீட்டை நெருங்குவதே இயலாத நிலை. கட்டிலோடு வீட்டுக்குள் நுழைவதைப் பற்றி கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
அவர்கள் வீட்டின் பின்புறமாகச் சென்றார்கள். அந்த முடக்குவாதக் காரரைக் கட்டிலோடு சுமந்து கொண்டு வீட்டின் கூரையில் ஏறினார்கள். கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கினார்கள்.
அவரைக் கட்டிலோடு இயேசுவின் முன்னால் இறக்கினார்கள்.
அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு பிரமித்தார். சுற்றும் முற்றும் பார்த்தார். பின் தனக்கு முன்னால் கட்டிலோடு கீழே இறக்கப்பட்ட அந்த மனிதனை நோக்கி, ‘மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார்.
இயேசு வழக்கமாக ‘குணம்பெறு என்றோ உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்றோ தான் சொல்வது வழக்கம். அவர் குணமாக்கும் போது, ‘பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று இதுவரை சொன்னதில்லை. இப்போது தான் சொல்கிறார்.
மறைநூல் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள்.
‘இவன் ஏன் இப்படிப் பேசுகிறான். பாவங்களை மன்னிக்க இவன் யார்? பாவங்களைக் கடவுள் ஒருவர் தான் மன்னிக்க முடியும்’ அவர்கள் மனதில் எரிச்சலடைந்தார்கள்.
உளவாளிகளுக்கு ஒரு தகவல் கிடைத்து விட்டது. இயேசு தேவ நிந்தனை செய்கிறார். கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொண்டவர், இவர் பாவங்களை மன்னிப்பதாகக் கூறி தன்னையும் கடவுளைப் போல காட்டிக் கொள்கிறார். இது சாவுக்குரிய பாவம். உளவாளிகள் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.
இயேசு அவர்களைத் திரும்பிப் பார்த்தார்.
‘ஏன் உங்கள் உள்ளங்களில் அப்படி நினைக்கிறீர்கள்? எழுந்து படுக்கையைத் தூக்கிக் கொண்டு போ என்று இவரிடம் நான் சொல்லியிருக்க முடியும். அது எனக்கு மிகவும் எளிது. ஆனாலும் மானிட மகனுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் சொல்கிறேன்’ என்றார்.
மானிட மகன்! இயேசுவின் வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த மறைநூல் அறிஞர்களுக்கு இன்னும் அதிர்ச்சி. ஏனென்றால் அவர்களுடைய பழைய இறைவாக்கினர்களில் ஒருவரான தானியேல் ‘மானிட மகன் வானத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வருவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இயேசுவின் மானிட மகன் பிரயோகம் இயேசு தன்னை தானியேல் தீர்க்க தரிசி சொன்ன கடவுளாகக் காட்டிக் கொள்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்தது. ஆனால் வெளிப்படையாக எதுவும் பேசாமல் அமைதி காத்தனர். ஏனென்றால் அங்கே இருந்த கூட்டத்தில் ஒருசிலரைத் தவிர அனைவரும் இயேசுவின் ஆதரவாளர்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
இயேசு முடக்குவாதக் காரரிடம் திரும்பி ‘நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்றார்.
அதுவரை உடல் அசைவில்லாமல் கிடந்த அவருடைய உடல் மெல்ல அசைந்தது. அவர் மெல்ல எழுந்தார். கூட்டம் ஸ்தம்பித்தது. அவர் கால்களைத் தரையில் ஊன்றினார். வலுவற்றுக் கிடந்த கால்கள் இப்போது சுயமாக நிற்கின்றன.
அவர் அந்த மக்கள் கூட்டத்துக்கு முன்பாகவே தன்னுடைய படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியேறினார்.
இயேசு கடவுளின் மகன் எனும் இயேசுவின் வெளிப்படுத்துதல் மக்களை பரவசப்படுத்தியது.

Next Story