என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்
    X

    உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்

    ஈஸ்டர் பண்டிகை ஒரு வசந்த கால தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
    உலகின் மாபெரும் அவதார புருஷன் நம் இறைமகன் இயேசு பிரான். அன்பை, அதன் உண்மையான பரிமாணத்தை உலகுக்கு உணர்த்தவே பிறந்து, கொடிய துன்பங்கள் தாங்கி, உயிர்த்தெழுந்தார் இறைமகன்.

    இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது.

    உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள். உயிர்த்தெழவும், மறுபடைப்புக்குத் தயாராகவும் அதில் பங்குபெறவும் மானுடருக்குக் கிடைத்த பரிசு. அது ஒரு புண்ணாற்றும் இயக்கத்தின் தொடர்ச்சி.

    ஈஸ்டர் கொண்டாட்டங்கள் சகல மனிதர்களுக்கும் புண்ணாற்றுதல் என்ற மானுடப் பணிக்கான அழைப்பு. மனிதருள் உறைந்திருக்கும் மரணத்தை வெல்லும் சக்தியை நினைவுபடுத்தி வாழ்வைப் புதுப்பிக்கவும் ரணமாகிவரும் புவியின் புண்களை ஆற்றவும் அளிக்கப்படும் அறைகூவல்.

    எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் கல்வாரி மலையில் இயேசு பிரானை சிலுவையில் அறைந்தனர். அந்த நிலையிலும் தனக்கு தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார் இயேசு. இந்த இறைகுணம் மனிதனுக்கும் வரவேண்டும் என்பது கர்த்தரின் சித்தம். மனிதனுக்குள் இருக்கும் இறைவனை வெளிப்படுத்தல் அது.

    சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது. இந்த நாளை அனைவருமே கொண்டாடலாம்.

    ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது. இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர்.
    Next Story
    ×