என் மலர்
ஆன்மிகம்

ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய பெருவிழா தொடங்கியது
ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 285-வது ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பக்தர்கள் புனித அடைக்கல அன்னையின் திருஉருவ படம் பொருந்திய திருக்கொடியை ஆலய வளாகத்திலிருந்து ஊர்வலமாக ஏலாக்குறிச்சி கடைவீதி வழியாக எடுத்து வந்து ஆலய வளாகத்தில் உள்ள திருக்கொடி கம்பத்திற்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து பங்கு தந்தை லூர்துசாமி தலைமையில் தஞ்சாவூர் பங்கு தந்தை தார்சிஸ், புதுக்கோட்டை ராபர்ட் தனராஜ் ஆகியோர் முன்னிலையில், தஞ்சாவூர் பிரான்சிஸ் சேவியரால் திருக்கொடி மந்திரித்து புனிதப்படுத்தப்பட்டு பக்தர்களின் மரியே வாழ்க என்ற பக்திகோஷத்துடன் அன்னையின் திருக்கொடி ஏற்றபட்டது. தொடர்ந்து ஆலயத்தில் தொடக்க திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு தந்தை ஆல்பர் சேவியர் மற்றும் ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி, மேல வரப்பன்குறிச்சி மற்றும் பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நேற்று மாலை பங்குதந்தை லூர்துசாமி தலைமையில் திருப்பலியும், சிறிய தேர்பவனியும் நடைபெற்றது. இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை மைக்கேல் பட்டி பங்குதந்தை அந்தோணி ஜோசப், வேளாங்கண்ணி அதிபர் பிரபாகர், புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ், சென்னை ராயப்பன், தஞ்சாவூர் டெரென்ஸ், வரதராஜன் பேட்டை வின்சென்ட் ஆகியோர் தலைமையில் திருப்பலிநடக்கிறது.
அதைதொடர்ந்து சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. வருகிற 16-ந் தேதி மாலை 6 மணிக்கு பெங்களூர் உயர் மறை மாவட்ட குருக்கள் அமர்நாத், ஜான்சுதீப், கில்பர்ட், மோசஸ் ஆகியோரால் திருவழிபாடும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் மலர் மற்றும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட புனித அடைக்கல அன்னை எழுந்தருளும் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
தொடர்ந்து 17-ந் தேதி காலை 6 மணியளவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் விழா சிறப்பு திருப்பலியும், மதியம் 12 மணியளவில் மலையாள திருப்பலியும், மாலை 6 மணியளவில் திருவழிபாடும் நடைபெறுகிறது. இரவு 11 மணியளவில் அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. 18-ந் தேதி காலை 8 மணியளவில் பங்கு தந்தை லூர்துசாமி தலைமையில் விழா நன்றி திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Next Story