என் மலர்
ஆன்மிகம்

சைதாப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 465-வது ஆண்டு பெருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது
சைதாப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 465-வது ஆண்டு பெருவிழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சென்னை மயிலை உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கொடியேற்றுகிறார். அதைத்தொடர்ந்து திருப்பலியும் நடைபெறுகிறது.
ஆண்டு பெருவிழா 14-ந்தேதி(வியாழக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு வெவ்வேறு தலைப்புகளில் நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. அதில், வருகிற 23-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் ஏ.நீதிநாதன் தலைமை தாங்குகிறார்.
24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) அன்னையின் மாபெரும் விழா நடக்க இருக்கிறது. அதையொட்டி, காலை 8 மணிக்கு சென்னை மயிலை உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் புதுநன்மை வழங்குதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு கிண்டி மறைவட்ட முதன்மை குரு என்.ஏ.சார்லஸ்குமார், தரமணி பங்கு தந்தை போஸ்கோ ஆகியோர் தலைமையில் கொடி இறக்க விழாவும் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் அதிபரும், பங்கு தந்தையுமான எம்.வி.ஜேக்கப், உதவி பங்கு தந்தை தே.ஜீவா, ஆலய மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story