search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யூதா ததேயு
    X
    யூதா ததேயு

    வாணுவம்பேட்டையில் உள்ள யூதா ததேயு ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    3-வது நாளான நாளை (புதன்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் மாலை பங்கு தந்தை ஜான் போஸ்கோ தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், திருத்தேர் மந்திரிப்பு நிகழ்வும் நடக்கிறது.
    சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள திருத்தூதர் யூதா ததேயு திருத்தலத்தின் 44-ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ராமாபுரத்தில் உள்ள கிறிஸ்து ஜோதி ஆலய பங்குத்தந்தை ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார்.

    விழாவின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலியும் நடைபெற உள்ளது. 3-வது நாளான நாளை (புதன்கிழமை) திருத்தேர் பெருவிழா நடக்கிறது. அன்றைய தினம் மாலை பங்கு தந்தை ஜான் போஸ்கோ தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், திருத்தேர் மந்திரிப்பு நிகழ்வும் நடக்கிறது. 4-வது நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடக்கிறது.

    அன்றைய நாளில் காலை திருப்பலியும், மாலை திருவிழா திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு புனித தோமையார் அகாடமி இயக்குனர் சி.பால்ராஜ் தலைமை தாங்குகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மார்ட்டின் ஜோசப், திருத்தல ஆன்ம குரு ஐசக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×