என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அல்போன்சா
    X
    புனித அல்போன்சா

    நாகர்கோவிலில் புனித அல்போன்சா திருநாள் நிகழ்வுகள்

    நாகர்கோவிலில் புனித அல்போன்சா திருநாள் நிகழ்வுகள் 4 நாட்கள் நடக்கிறது. இதை பொதுமக்கள் இணையதளம் மற்றும் தொலைக்காட்சியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவின் முதல் புனிதையான அல்போன்சாவின் பெயரை தாங்கி நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் புனித அல்போன்சா திருத்தலம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28-ந் தேதியை மையமாக கொண்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் 4 நாட்கள் மட்டுமே திருப்பலி மற்றும் நவநாள் ஜெபம் நடக்கிறது.

    அதன்படி திருப்பலி மற்றும் நவநாள் ஜெபம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.

    இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆவணக்காப்பாளர் தாமஸ் சத்தியநேசன் நவநாள் ஜெபம் ஜெபிக்கிறார். தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுவத்துப்பறம்பில் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் சதிஷ் குமார் ஜாய் மறையுரையாற்றுகிறார். 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ரோபின்ஸ் குழிகோடில் நவநாள் ஜெபம் ஜெபிக்க, அருட்பணியாளர் ஜிம்மி தெக்கே கடுமத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் அஜின் ஜோஸ் மறையுரையாற்றுகிறார்.

    புனித அல்போன்சா விண்ணகம் சென்ற 28-ந் தேதி நிறைவுநாள் நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபத்தினை தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் அருட்பணியாளர் தாமஸ் பவுவத்துப்பறம்பில் ஜெபிப்பார். தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் திருப்பலி நிறைவேற்றுவார்.

    ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வரஅனுமதி இல்லாத காரணத்தால் இந்த திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக ஒளிபரப்பப்படும்.

    குறிப்பாக www.alphonsachurch.org, www.catholictamiltv.in, http://www.youtube.com/ St.AlphonsaShrineChurchNagercoil, www.youtube.com/arulthoothu TV, www.youtube.com/catholictodaytamil my TV போன்ற இணையதளங்களிலும் உள்ளூர் தொலை காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெப உதவிக்கு 9487084901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜாண் பந்திச்சிறைக்கல் மற்றும் துணைப் பங்குத்தந்தை டோஜி செபாஸ்டின் ஆகியோர் செய்துள்ளனர்.
    Next Story
    ×