என் மலர்
ஆன்மிகம்

புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத்திருவிழா
புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத்திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்காலை சேர்ந்த தருமபுரம் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத்திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலையில் சிறிய தேர்பவனி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 5 தேர் பவனி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காரைக்கால் பங்குத்தந்தை அந்தோணி லூர்து ராஜ், உதவி பங்குத்தந்தை ஜான்சிரில் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்தி, தேர்களை மந்திரித்து புனிதநீர் தெளித்து தேர்பவனியை தொடங்கி வைத்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய தேர் உள்ளிட்ட 5 தேர்களும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நள்ளிரவு ஆலயத்தை வந்தடைந்தது. நேற்று இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், கிராம பஞ்சாயத்தார்களும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

Next Story