என் மலர்
ஆன்மிகம்

வில்லியனூர் மாதா பேராலயம்
வில்லியனூர் மாதா பேராலய திருவிழா நாளை தொடங்குகிறது
வில்லியனூர் லூர்து மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
புதுவை மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து மாதா பேராலயம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த 6-வது நாளில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலை 5-30 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. இதனைதொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெறும்.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் தேர்பவனி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. 10-ந்தேதி அன்று காலை 7-30 மணிக்கு புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7-30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. மறுநாள் காலை 6-30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல பங்குத்தந்தை ரிச்சர்ட் அடிகளார் தலைமையில் விழாக்குழு வினர், பங்குப்பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வ குழுவினர் செய்துள்ளனர்.
பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகருக்குப்பின் உலகிலேயே லூர்து மாதாவிற்கென்று கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும். உலகிலேயே ஒரு சில சொரூபங்கள்தான் போப் ஆண்டவரால் முடி சூடப்பட்டுள்ளன. இதில் வில்லியனூர் மாதா சொரூபமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பு இயற்கையாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. பக்தர்களின் தேவையை முன்னிட்டு தற்போது இங்கு அரைவட்ட வடிவில் இந்தியா விலேயே பெரிய பிரமாண்டமான புதிய ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

Next Story