search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான அந்தஸ்து அளித்த புரட்சியாளர்
    X

    பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான அந்தஸ்து அளித்த புரட்சியாளர்

    • சமயப் புரட்சி செய்த ராமானுஜர் ஒப்பற்ற சமூக சீர்திருத்தவாதி.
    • சமய சித்தாந்தங்களை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொணர்ந்து, அனைவரும் அவற்றை எளிதாகக் கடைப்பிடிக்கப் பாடுபட்டவர்.

    சமயப் புரட்சி செய்த ராமானுஜர் ஒப்பற்ற சமூக சீர்திருத்தவாதி.

    சமய சித்தாந்தங்களை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொணர்ந்து, அனைவரும் அவற்றை எளிதாகக் கடைப்பிடிக்கப் பாடுபட்டவர்.

    ஆண்டவனின் சன்னி தானத்திலும் கர்ப்ப கிரகத்திலும் வடமொழியுடன் சேர்ந்து தமிழ் வேதமாகிய திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும் ஓதுவதற்கு ஏற்பாடு செய்தார்.

    பெண்களுக்கு ஆண்களுக்குச் சரி நிகரான அந்தஸ்து அளித்து, அவர்களையும் சீடர்களாக ஏற்றுக்கொண்ட முதல் சமயத்தலைவர் ராமானுஜரே.

    முஸ்லிம் அரச குமாரியை, மதம் மாறாமலேயே, நாராயண மூர்த்திக்குத் திருமணம் செய்து வைத்ததாகச் சடங்குகளை உருவாக்கி, இஸ்லாமியருடன் சமய இணக்கம் காண வழி வகுத்தவர் ராமானுஜர்.

    இவ்வாறு பல துறைகளிலும் புரட்சிகளைச் செய்த மகான் உடையவர் ஒருவரே என்றால் மிகையாகாது.

    இஸ்லாமியர்களுடன் இணக்கம்

    மேலக்கோட்டையில் திருநாராயண சுவாமியின் உற்சவ மூர்த்தியான செல்வப்பிள்ளையை மணந்து கொண்ட துருக்க நாச்சியாருக்கு (பீபி நாச்சியாருக்கு) தனிச் சந்நிதி உள்ளது.

    இதைப் போன்றே திருவரங்கம் அரங்கநாதர் கோவிலிலும், வேறு பல பிரபலமான பெருமாள் கோவில்களிலும் துருக்க நாச்சியாருக்குச் சந்நிதிகள் உண்டு.

    திருவரங்கம் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசித் திருவிழாவில், பகல் பத்துத் திருநாளில் உற்சவப் பெருமாள் முஸ்லிம் இனத்தவரைப் போல லுங்கி கட்டிக் கொண்டு இந்தத் துருக்க நாச்சியார் சந்நிதிக்குச் சென்று அவருக்குக் காட்சி தரும் வழக்கம் ராமானுஜர் காலத்திலிருந்து இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறது.

    இவ்விதம் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்குமிடையே இணக்கச் சூழலை உருவாக்கிய ராமானுஜரின் ஞானப்பார்வை, வெறும் சமயச்சடங்காக மட்டும் கூனிக் குறுகியிராமல் பரந்த சமுதாயத்தின் மீது உண்மையான தாக்கம் செலுத்தியிருந்தது.

    Next Story
    ×