என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வில் யங், ரவீந்திரா, டாம் லாதம் அபாரம்- நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு
    X

    வில் யங், ரவீந்திரா, டாம் லாதம் அபாரம்- நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து 322 ரன்கள் குவிப்பு

    • வில் யங், ரவீந்திரா, டாம் லாதம் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
    • நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐதராபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் நெதர்லாந்து மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர்.

    இருவரும் முதல் 3 ஓவர்களை மெய்டன் செய்தனர். முதலில் தடுமாறினாலும் பின்னர் பவுண்டரிகளை விளாசி தள்ளினர். கான்வே 32 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா வில் யங் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்தனர்.

    அணியின் ஸ்கோர் 144 ரன்கள் இருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. யங் 70 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மிட்செல் 48, டாம் லாதம் 53 என அதிரடியாக விளையாட கடைசியாக வந்த சாட்னர் 17 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×