search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மோசமான சாதனை படைத்த பாஸ் டி லீடு
    X

    மோசமான சாதனை படைத்த பாஸ் டி லீடு

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய மேக்ஸ்வெல் சதத்தால் 399 ரன்கள் குவித்தது.
    • பின்னர் ஆடிய நெதர்லாந்து 90 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் போட்டியில் நெதர்லாந்து - ஆஸ்திரேலியா மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய மேக்ஸ்வெல் சதத்தால் 399 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 90 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் நெதர்லாந்து அணி சார்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் பாஸ் டி லீடு உலககோப்பை போட்டிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து மோசமான சாதனை படைத்துள்ளார். மோசமான பந்துவீச்சாளர் என்ற பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இந்த போட்டியின் போது 10 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் 115 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.

    இதன்மூலம் ஒரே போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மோசமான பவுலர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் மைக் லீவிஸ் என்பவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 10 ஓவரில் 113 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அதேபோல ஆடம் ஜாம்பாவும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 113 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் இவர்கள் இருவரையும் கடந்த பாஸ் டி லீடு இந்த பேட்டியில் 115 ரன்கள் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×