என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட்இண்டீஸ் வெற்றி- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது
- இந்த வெற்றி மூலம் வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிக் கொண்ட தொடரில 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- 2-வது ஒருநாள் போட்டி துபாயில் நாளை நடக்கிறது.
ஷார்ஜா:
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது.
இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடந்தது.
முதலில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 47.1 ஓவர்களிர் 202 ரன்னில் சுருண்டது. அல்நாசர் அதிகபட்சமாக 58 ரன்னும், விர்த்தியா அரவிந்த் 40 ரன்னும் எடுத்தனர். கீமோ பவுல் 3 விக்கெட்டும், டொமினிக் டிரேக்ஸ், ஓடியன் சுமித், யானிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
Ali Naseer makes an IMPRESSIVE start to his ODI career - The highlights of the young all-rounder's 58 off 52 ??#UAEvWI pic.twitter.com/jEgC8CiwjT
— UAE Cricket Official (@EmiratesCricket) June 4, 2023
பின்னா் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 35.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் பிரண்டன் கிங் சதம் அடித்தார். அவர் 112 பந்தில் 112 ரன்னும் (12 பவுண்டரி, 4 சிக்சர்), புரூக்ஸ் 44 ரன்னும் எடுத்தனர்.
Well done, Brandon ?
— FanCode (@FanCode) June 5, 2023
Bringing up maiden ODI ton like a KING ?
.
.#UAEvWI #LIVEonFanCode pic.twitter.com/cypv0a8pYU
இந்த வெற்றி மூலம் வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிக்கொண்ட தொடரில 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி துபாயில் நாளை நடக்கிறது.






