search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல்முறையாக நடக்கிறது- கோவையில் நாளை முதல் டி.என்.பி.எல். போட்டிகள்
    X

    முதல்முறையாக நடக்கிறது- கோவையில் நாளை முதல் டி.என்.பி.எல். போட்டிகள்

    • நெல்லை அணி மட்டுமே இதுவரை தோற்கவில்லை.
    • 2-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந் தேதி நெல்லையில் தொடங்கியது. அங்கு 6 ஆட்டங்கள் நடந்தது. அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் 7 போட்டிகள் நடைபெற்றது.

    2 நாள் இடைவெளிக்கு பிறகு கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நாளை ( 10-ந் தேதி தொடங்குகிறது. கோவையில் முதல் முறையாக டி. என்.பி எல். ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி மட்டுமே இதுவரை தோற்கவில்லை. தான் மோதிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும், 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் , 8 விக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சையும், 26 ரன்னில் மதுரை பாந்தர்சையும் தோற்கடித்தது. அந்த அணி 5-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    திருப்பூர் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் திண்டுக்கல்லிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது வெற்றி வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரஹில்ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன. 2-வது வெற்றியை பெறப்போவது திருச்சியா ? கோவையா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×