என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்
    X

    சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங்

    • டாஸ் வென்ற சீசம் மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் போட்டியின் 6-வது சீசன் நெல்லையில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது. நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது. டி.என்.பி.எல் போட்டியின் 3-வது நாளான இன்று நெல்லை சங்கர்நகர் மைதானத்தில் 2 ஆட்டங்கள் நடக்கிறது.

    முதல் ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சதுர்வேத் தலைமையிலான சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சீசம் மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    Next Story
    ×